இயல் ஏழு துணைப்பாடம்.
திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
குறிப்புச் சட்டகம்:
- முன்னுரை.
- எட்டயபுரம்.
- சீவைகுண்டம்.
- கருவைநல்லூர்.
- குற்றாலம்.
- கொற்கை.
- முடிவுரை.
முன்னுரை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் திருநெல்வேலிப் பகுதியை சேர்ந்த புலவர்களைப் பற்றி அறியலாம்.
எட்டயபுரம்
கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் இது. எட்டயபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரியில் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும், தமிழை அழுத்தம் திருத்தமாக கற்ற இடம் திருநெல்வேலி தான். பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம் காலத்தவர்கள். சிறிது காலம் முன் வாழ்ந்த புலவர் பலர். அவர்களுள் ஒருவர் கடிகைமுத்துப் புலவர். இவர் எட்டயபுரத்தில் பிறந்தவர். எட்டயபுரத்து அரசர் வெங்கடேசுர எட்டப்பராசாவை பற்றி பல பாடல்கள் பாடியுள்ளார்.
சீவைகுண்டம்.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு போகிற வழியில் சீவைகுண்டம் உள்ளது. பிள்ளை பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளை பற்றி பாடியுள்ளார்.
கருவை நல்லூர்.
சங்கரன்கோவிலுக்கு எட்டு மைல் தொலைவில் உள்ளது கருவை நல்லூர். இதற்கு கரிவலம்வந்தநல்லூர் என்றும் பெயர். கோவிலும், சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பை புலவர் ஒருவர் பாடியுள்ளார்.
குற்றாலம்.
கவி இல்லாமலே மனதை கவரக்கூடிய இடம் குற்றாலம். கோவில்,அருவி, சோலைகள் அமைந்த மலை, தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதை பார்த்தால் உலகில் இது போன்ற இடம் இல்லை எனலாம். ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் ஞான சம்பந்தர் இங்கு வந்ததை நினைவூட்டும் வகையில் ”நுண் துளி தூங்கும் குற்றாலம் ” என்று பாடியுள்ளார். இருநூற்ரைம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த திரிகூடராசப்பக் கவிராயர் குற்றால குறவஞ்சி பாடலை எழுதியுள்ளார்.
கொற்கை.
கொற்கை சிறிய ஊர்தான். அதன் புகழோ அபாரம். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த முத்தொள்ளாயிர ஆசிரியர் இதனைப் பற்றி பாடியுள்ளார்.
முடிவுரை.
தமிழ் மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்னும் பெருமைகளை கொண்ட நகர் திருநெல்வேலி என்பதை இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்டோம்.